First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு கைது: ராமதாஸ் கண்டனம் - மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: இடதுசாரிகள் முடிவு - தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் - மத்திய அரசுக்கு சமாஜ்வாடி ஆதரவு உறுதி: காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து நீங்கியது
சினிமாவை விட்டு விலகுவதா?
-சிம்ரன் அதிர்ச்சி

சில்வர் ஸ்டார் பிலிம் பேக்டரி நிறுவனம் சன் டி.வி யில் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற Simranநிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கப் போகிறவர் நமது சிம்ரன். இந்த நிகழ்ச்சியின் மூலமாக சிறந்த ஹீரோ, ஹீரோயின்களை தேர்ந்தெடுத்து இந்த நிறுவனமே சினிமா வாய்ப்பையும் வழங்கவிருக்கிறது. வெறும் நடுவராக மட்டும் இல்லாமல் நடிப்பு பயிற்சியும் அளிக்கவிருக்கிறாராம் சிம்ரன். ஜெயா டி.வியில் சிம்ரன் திரை, கலைஞர் டி.வி யில் மானாட மயிலாட, சன் டி.வி யில் சூப்பர் ஸ்டார்ஸ். சின்னத்திரையை விட்டு வெளியே வரும் எண்ணமே இல்லையா? சிம்ரனிடம் கேட்டால், ஏகப்பட்ட சினிமா வாய்ப்புகள் வருது. அதில் சிலவற்றை ஒப்புக் கொண்டிருக்கிறேன். அவை எது என்பதை விரைவில் உங்களுக்கு அறிவிப்பேன். சினிமாவில் இருந்த போது எப்படி ஒரே நேரத்தில் பல படத்தில் நடித்தேனோ, அது போலதான் இப்போது ஒரே நேரத்தில் பல டி.வி களில் தலையை காட்டுகிறேன். மற்றபடி சினிமாவை விட்டு விலகவே இல்லை என்கிறார் திட்டவட்டமாக!

-ஆர்.எஸ்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter