சுமார் ஒரு டஜன் திருமணங்கள் இந்த வருடத்தில்! ஆனால் தலை தீபாவளிக்கு கவனத்தை ஈர்க்கிற ஜோடிகள் ஒன்றோ, இரண்டோதான்! சுட, சுட கடலை போட்டுக் கொண்டிருக்கும் ஜோடி ஸ்ரீகாந்த்-வந்தனாதான். இவர்களை பொறுத்தவரை ஹனிமூன் முடிந்த கையோடு வருகிறது தீபாவளி.
அடிப்படையில் ஐயர் ஃபேமிலி என்பதால், முறைப்படி தீபாவளியை கொண்டாடுகிற குடும்பம் ஸ்ரீகாந்துடையது. மனைவிக்கு காஞ்சிபுரம் பட்டுப்புடவை வாங்கப் போகிறாராம். அது மட்டுமல்லாமல் விசேஷ பரிசு ஒன்றையும் வாங்கியிருக்கிறாராம். அது என்னன்னு இப்பவே சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடுமே என்கிறார் அலைபாயும் கூந்தலை பின்னுக்கு தள்ளிக்கொண்டு! எட்டப்பன் ஷ§ட்டிங் துவங்கிவிட்டது. இதுதான் தீபாவளி போனஸ் இவரை பொறுத்தவரை!
அடுத்த சரவெடி தம்பதிகள் நரேன்-மஞ்சு. ஒவ்வொரு வருட தீபாவளிக்கும் இவருடைய குருநாதர் ராஜீவ் மேனன் வீட்டுக்கு போய் தீபாவளியை கொண்டாடுவது நரேனின் வழக்கம். இந்தமுறை மனைவி மஞ்சுவோடு போய், ராஜீவ்மேனின் தாயிடம் ஆசீர்வாதம் வாங்குவேன் என்கிறார் மகிழ்ச்சியோடு. தொடர்ந்து படப்பிடிப்பில் இருப்பதால் இன்னும் மனைவிக்கு புடவைகூட வாங்கவில்லை. ஹோம் மினிஸ்டர் கோவிச்சுப்பாங்க என்கிறார் போலி பயத்துடன்!
மற்றொரு ஜோடி மாளவிகா-சுமேஷ். தீபாவளி பர்சேஸ் இன்னும் செய்யவில்லை என்கிறார் மாளவிகா. (எட்டு முழத்தில் புடவையா எடுக்க போறீங்க? விடுங்க மேடம்) அன்று ஷ§ட்டிங் இல்லாததால் கணவரோடு இருப்பேன். அதுவே எனக்கு தீபாவளிதான் என்கிறார் மகிழ்ச்சியோடு.
நந்திதா, ரக்ஷிதா, ரவளி, நித்யாதாஸ் என்று சுமார் அரை டஜன் ஜோடிகளுக்கும் இது தலை தீபாவளி. வாழ்க்கை மத்தாப்பாக ஜொலிக்க வாழ்த்துவோமே!
-ஆர்.எஸ்.அந்தணன்
|