First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
மத்திய அரசுக்கு ஆதரவு வாபசா? 23-ந் தேதி ஆலோசனை நடத்தவிருப்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் பேட்டி - அலுவலகத்துக்கு வெளியேயும் பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குற்றமே: டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு - நாட்டிலேயே முதல் முறையாக மயிலாடுதுறை அருகே ஹீலியம் வாயு ஆலை தொடக்கம்
கலக்கப்போவது ஆறு!
-திக் திக் திக் தீபாவளி!

பில்லாவும், பீமாவும் சற்றே ஒதுங்கிக் கொள்ள, போட்டியில் குதித்திருக்கும் படங்கள் மொத்தம் ஆறே ஆறு! அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன், கண்ணாமூச்சி ஏனடா, மச்சக்காரன், ஆக்ரா ஆகிய படங்கள்தான் அவை.

'தில்லு இருந்தா மல்லுக்கட்டு' என்று முண்டா தட்டுகிற படங்களுக்கு நடுவில், புதுமுகங்கள் நடித்திருக்கும் ஆக்ராவும் இறங்கியிருப்பது பாராட்டுக்குரியதே! வலிமையானவர்களை பிறகு பார்ப்போம். நாம் எப்போதும் எளிமையானவர்களின் கட்சி!

ஆக்ரா-

காதலும் இசையும் கைகோர்த்து சங்கமிக்கும் கதை இது. தாஜ்மகாலை சுற்றி சுற்றி vikesh  anjaliபடம் பிடித்திருக்கிறார்கள். சித்திரைச்செல்வன் என்ற புதியவர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பல புதியவர்கள் தங்கள் திறமையை காட்டியிருக்கிறார்கள். வைபவ பாலு என்பவரின் இசைக்கு வைரமுத்து போன்ற ஜாம்பவான்களும் பாடல் எழுதியிருக்கிறார்கள். விகாஸ் என்ற ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சலி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்படுகிறார். ஒய்.மகேந்திரன் போன்ற எரிச்சலூட்டும் முகங்களும் உண்டு! எல்லா ஏரியாவிலும் நல்ல தியேட்டர்களை பெரிய படங்கள் ஆக்ரமித்துக் கொள்ள, தாஜ்மஹாலில் படம் எடுத்தவர்கள் டூரிங் தியேட்டர்களில் அந்த பிம்பத்தை காட்டவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள்.

பலம் - புதியவர்களின் சங்கமம்
பலவீனம் - அதேதான்

மச்சக்காரன்-

கள்வனின் காதலி என்ற தோல்விப்படத்தை கொடுத்த இயக்குனர் தமிழ்வாணன் jeeva  kamnaஇயக்கியிருக்கும் படம். ஆனால், வரிசையாக இரண்டு ஹிட்டுகள் கொடுத்த ஜீவன் நடித்த படம் என்பதால், விநியோகஸ்தர்கள் ரெடி! நல்ல தியேட்டர்களும் தயார். வழக்கம்போல் நெகட்டிவ் ரோல்தான் ஜீவனுக்கு. காம்னா ஹீரோயின். 'காமிப்பேண்ணா' என்கிறாராம் ஒவ்வொரு பிரேமிலும்! தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, ஜீவனையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் தமிழ்வாணனுக்கு. ஒரேயரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் மாளவிகா. எதுவுமே கிடைக்காத ஒரு பையனுக்கும், எல்லாமே கிடைக்கிற ஒரு பெண்ணுக்கும் இடையில் நடக்கிற கதை. கேட்க நல்லாதான் இருக்கு. படத்திலும் இருக்கணுமே!

பலம் - யுவன்சங்கர்ராஜாவின் இசை
பலவீனம் - காம்னாவின் சென்டிமென்ட்

பொல்லாதவன்-

ரஜினி நடித்து ஓஹோவென்று ஓடிய படம். அதே டைட்டிலை அவரது மருமகன் polladhavanகைப்பற்றியிருப்பதால், ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. பரட்டை என்கிற அழகு சுந்தரம் கொடுத்த வலி மிச்சமிருப்பதால், பார்த்து பார்த்து கதையை இழைத்திருக்கிறார்கள் தனுஷ§ம், படத்தின் இயக்குனர் வெற்றிமாறனும். தனுஷ§க்கு ஜோடி திவ்யா. சுமார் ஆறு கோடி ரூபாயில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் இசை ஜி.வி.பிரகாஷ். எங்கேயும் எப்போதும் என்ற கமலின் பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார். ஒவ்வொரு இளைஞனுக்கும் எதையாவது அடையணும் என்ற ஆசை இருக்கும். கஷ்டப்பட்டு அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுகிறார் தனுஷ். ஆனால் அது அவரிடமிருந்து பறிபோகிறது. அதை மீட்பதற்கு தனுஷ் என்னென்ன செய்கிறார் என்பதே கதை.

பலம் -தனுஷின் சண்டைக்காட்சிகள், எங்கேயும் எப்போதும் ரீமிக்ஸ் பாடல்
பலவீனம் - வடிவேலு, விவேக் இல்லாதது

கண்ணாமூச்சி ஏனடா-

ப்ருத்திவிராஜுக்கும், சந்தியாவுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்க, prithviraj  sandhyaபடத்திலும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள் இருவரும். பல நாட்கள் கழித்து மூட்டை கட்டி வைத்திருந்த தன் லொள்ளுகளை இந்த படத்தில் அவிழ்த்திருக்கிறார் சத்யராஜ். இவருக்கு ஜோடி ராதிகா. இவர்களின் மகள்தான் சந்தியா. மகளின் காதலுக்கு அம்மா பச்சைக்கொடி காட்ட, அப்பா காட்டுவதோ சிவப்புக் கொடி! இந்த பிரச்சனையை மையமாக வைத்து பெற்றோர்கள் இருவரும் பிரிகிறார்கள். பிள்ளைகளின் காதல் மட்டுமல்ல, பெரிசுகளின் பிரிவும் என்னாச்சு என்பதுதான் கதை! கண்டநாள் முதல் என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பிரியா இயக்கியிருக்கிறார்.

பலம்- கலகலப்பான குடும்ப சென்ட்டிமென்ட்
பலவீனம் - கமர்ஷியலாக இருக்குமா என்ற கேள்வி

வேல்-

பேனாவுக்கு பதிலாக அரிவாளால் கதை எழுதும் ஹரியின் படம். இவருடைய surya  asinஸ்டைலின்படி, தென் மாவட்டங்களில் நடக்கிற கதை. ஏகப்பட்ட அக்கிரமங்கள் செய்யும் கலாபவன்மணியை சூர்யா தட்டிக்கேட்க வெடிக்கிறது பகை. குடும்ப உறவுகள் சிதையாமல் சூர்யா எப்படி மணியின் கொடுமைகளுக்கு மணியடிக்கிறார் என்பதுதான் கதை. சூர்யாவுக்கு ஜோடி அசின். பெப்சி உமாவை போல நடித்திருக்கிறாராம். அரிவாளை தூக்கினால் தரித்திரம். ஆனால் எதற்காக அதை எடுத்தான் என்பதுதான் சரித்திரம். இதுதான் படம் சொல்லும் 'நறுக், சுருக்'

பலம்- ஹரியின் வேகமான திரைக்கதை.
பலவீனம் - ஹரி-சூர்யா இணைந்து இதற்கு முன் கொடுத்த போரு... ஸாரி, ஆறு!

அழகிய தமிழ் மகன்-

தீபாவளிக்கு வருமோ, வராதோ என்ற பீதியை விஜய் ரசிகர்களிடையே கிளப்பிய vijay  shreyaபடம். ஆனாலும், அவசரம் அவசரமாக ரெடியாகிவிட்டார் அழகிய தமிழ் மகர்(!) இரண்டு வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்படியென்றால் புரிந்திருக்குமே. ஆள்மாறாட்ட கதை. முகத்துக்கு நேரே தப்பு செஞ்சா முரட்டு அடி அடிக்கணும். காதல்ல உண்மையா இருக்கணும். பணம், பதவி வந்தா பணிவாயிருக்கணும். அன்புக்கு பணிஞ்சு அடிதடிக்கு மிஞ்சி நிக்கணும். இப்படி நிறைய பாடங்கள் எடுக்கிறார் விஜய். ஜோடி ஸ்ரேயா. காரைக்குடி, பொள்ளாச்சி, சென்னை போன்ற ஊர்களில் படப்பிடிப்பு நடந்தாலும், டூயட் பாட சுவிட்சர்லாந்து, புக்கட் தீவு என்று பறந்திருக்கிறார்கள். தரணியிடம் உதவி இயக்குனராக இருந்த பரதன் இயக்கியிருக்கிறார். பொன்மகள் வந்தால் என்ற காலத்தை வென்ற பாடலை ரீமிக்ஸ் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். டைட்டில் பாடலை விஜய்க்காக இவரே பாடியுள்ளாராம்.

பலம் -விஜய் விஜய் விஜய்.... ஜய்!
பலவீனம் - காமெடிக்கு சத்யனாம் (இப்பவே கண்ணை கட்டுதே சாமி)

பின்குறிப்பு - இந்த தீபாவளி விருந்தில் ஒரு படத்தில் கூட விவேக் இல்லை பார்த்தீர்களா?

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter