|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை:பழ.நெடுமாறன் - ஏர் இந்தியா விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு - ஈரோடு அருகே 3 குழந்தைகள் கிணற்றில் வீசி கொலை; தாயும் குதித்து தற்கொலை - பிரபாகரனின் தாயார் மலேசியா சென்றார்: சிவாஜிலிங்கம் - இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு 2010இன் சிறந்த அரசியல் தலைவர் விருது
கமலை படமெடுக்கும் அக்ஷரா!
-வாரிசுகளால் பெருமைப்படும் அப்பாக்கள்!

ரஜினியின் பாபா படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் தன் வீடியோ கேமிராவில் பதிவு செய்திருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா. அந்த படம் எப்படி உருவானது என்பதை தனி வீடியோ தொகுப்பாக போடவும் திட்டம் வைத்திருந்தார் அவர். ஆனால் என்ன காரணத்தினாலோ அந்த வீடியோ தொகுப்பு வெளியிடப்படவே இல்லை.

அது போலவே தன் அப்பா கமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பை வீடியோவில் படம் பிடித்து வருகிறார் அக்ஷரா! பத்து கெட்டப்புகளில் தோன்றும் கமல், மேக்கப்புக்காக செலவிடும் நேரம், சிரமம் எல்லாவற்றையும் ஷ§ட் பண்ணுகிறாராம். இதுவாவது வீடியோ பதிவாக வெளிவருமா? அதிருக்கட்டும்.... கமலின் மற்றொரு மகள் ஸ்ருதி இசையை முறையாக படித்து வருகிறார். தமிழில் மட்டுமல்ல... உலக அளவில் மிகப்பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம். தமிழில் கமல் நடிக்கும் படத்தில் இருந்துதான் தன் முதல் முயற்சியை துவங்க போகிறார் ஸ்ருதி.

ரஜினியின் மகள் சௌந்தர்யா, ரஜினி நடிக்கும் அனிமேஷன் படம் ஒன்றை தயாரித்து வருகிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படத்தின் கதை விவாதத்தில் பங்கெடுத்துக் கொள்கிறாராம் ரஜினி.

வாரிசுகளாலும் பெருமைப்பட போகிறார்கள் இந்த அப்பாக்கள்!

-ஆர்.எஸ்.ஏ

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter