ஜே.கே.ரித்திஷ் என்பவர் அறிமுகமான முதல் படமான 'கானல் நீர்' அப்படத்தின் தலைப்பு மாதிரியே ஆகிவிட்டாலும், கோலிவுட்டை பொறுத்தவரை தொழிலாளர்களின் தோழனாகிவிட்டார் அவர். சினிமாவில் பணிபுரியும் ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் ஒவ்வொரு சங்கம் இருக்கிறது. அந்த சங்கங்களுக்கு வலிய சென்று உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரக்கணக்கில் உதவி வருகிறார். இதற்காக மாதந்தோறும் லட்சங்களை அள்ளி இறைக்கும் இவர், தமிழக அமைச்சர் ஒருவரின் பேரன். இதெல்லாம் இருக்கட்டும்... எம்.ஜி.ஆரின் வாரிசாகவே தொழிலாளர்களால் கருதப்பட்டாலும், ஒரு விஷயத்தில் ரித்திஷின் செல்வாக்கு தரைமட்டமாகிவிட்டது.
தற்போது இவர் நடித்து வரும் நாயகன் படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட நமீதாவை கேட்டார்களாம். எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் கொடுக்க தயார் என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால், புதுமுகங்களோடு ஆட்டம் போடுவதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் நமீ, ரித்திஷின் ஆசைக்கு நஹி சொல்லிவிட்டாராம்.
இத்தனைக்கும் இவரும், நமீதாவும் முன்பே அறிமுகமானவர்களாம். கொள்கை வீராங்கணையாகதான் இருக்கிறார் நமீதா!
-சங்கட சுப்பு
|