First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
மிருகம் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும்!
-புளுகிராஸ் அமைப்பு புகார்

பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் மிருகம் திரைப்படம் இந்த வாரம் 14-ந் தேதி ரிலீசுக்கு Mirugamதயார் நிலையில் இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 100 பிரிண்டுகள் வரை திரையிடும் திட்டத்தில் இருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் சாமி. இந்தநேரத்தில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்ற புளுகிராஸ் அமைப்பு புகார் செய்துள்ளது. தணிக்கை குழுவிற்கு அந்த அமைப்பினர் எழுதியுள்ள கடிதத்தில், மிருகம் படத்தில் மாட்டை கொடுமைபடுத்தி பல காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது மிருக வதை சட்டத்திற்கு எதிரானது. எனவே படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிலளித்துள்ள சாமி, மிருகம் படம் இப்போது சமுதாயத்தில் நிலவி வரும் மிக முக்கிய பிரச்சனையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பாராட்டையும், விருதையும் இந்த படத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். சில காட்சிகள் எதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டை பயன்படுத்தி எடுத்திருக்கிறோம். எந்த விதத்திலும் மாட்டை துன்புறுத்தவில்லை. புகார் தெரிவித்துள்ள அமைப்புக்கு படத்தை போட்டுக் காட்டி பிரச்சனைய தீர்ப்போம் என்றார்.

டிசம்பர் 14-ந் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படம் இது என்பதால் இந்த பிரச்சனை விரைவில் சுமூகமாக முடிய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள் இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள்.

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter