First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
கியாரண்டி ஹீரோயின்!
-தமன்னாவின் அசுர வேக பாய்ச்சல்

கேடி படத்தின் மூலம் அறிமுகமானாலும், தேடிப்பிடித்து பாராட்டுகிற அளவுக்கு Thamanaமார்க்குகளை வாங்கிவிட்டார் கல்லூரி படத்தில் தமன்னா! ஷ§ட்டிங் நடந்தபோது ஒருமுறை கூட வந்ததில்லையாம் அப்படத்தின் இயக்குனர் ஷங்கர். படம் முடிந்து ரஷ் பார்த்தவர், தமன்னாவை அழைத்து பாராட்டினாராம். அவ்வளவு பெரிய இயக்குனரே பாராட்டியதுதான் தமன்னாவுக்கு குளுக்கோஸ் சாப்பிட்ட புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தெலுங்கில் முன்னணியில் இருக்கும் இலியானாவும் இவரும்தான் சேர்ந்து நடித்திருந்தார்கள் கேடியில். இன்னும் சொல்லப்போனால், இலியானாவைவிட இவருக்குதான் வெயிட்டான ரோல் அந்த படத்தில். இலியானாவின் மார்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறிவிட்டது. அதேமாதிரி தானும் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்திருந்த தமன்னாவுக்கு அந்த நேரம் வந்தேவிடும் போலிருக்கிறது. நாகார்ஜுனாவுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறாராம் ஒரு தெலுங்கு படத்தில். தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கவிருக்கும் படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில் டப் செய்தால் கூட சூர்யாவுக்கு இருக்கிற மார்கெட்டுக்கு 100 நாள் கியாரண்டி! தமிழையும், தெலுங்கையும் ஒரு கை பார்க்காமல் விடமாட்டார் போலிருக்கிறது.

-ராசா.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter