சமீபத்தில் தன் மகனின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டார் பார்த்திபன். அப்போது மகனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள். எதுவாக இருந்தாலும் வாங்கி தருகிறேன் என்றாராம். அவரோ, கார் அல்லது காஸ்ட்லியான பொருளாக கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. பார்த்திபனே அதிரும்படி ஒரு கிஃப்ட் கேட்டிருக்கிறார். 'என் பிறந்த நாளுக்கு விஜய் வரணும்' இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காத பார்த்திபன், எதற்கும் கேட்டு வைப்போமே என்று விஜயை சந்தித்து தன் மகனின் ஆசையை சொல்லியிருக்கிறார்.
கண்டிப்பாக வருகிறேன் என்று உறுதியளித்த விஜயும் சொன்னபடி வந்து சேர, களைகட்டியதாம் மகனின் பிறந்த நாள். சந்தர்பம் கிடைக்கிற மேடைகளில் எல்லாம் தன் நன்றியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் பார்த்திபன்!
-ஆர்.எஸ்.
|