First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
கணக்கு போட்ட கேப்டன்.
-காத்திருக்கும் இயக்குனர்

அரசியலில் மட்டுமல்ல... சினிமாவிலும் கணக்கு போடுவதில் கேப்டனுக்கு நிகர் Vijayakanthஅவரேதான்! சமீபத்தில் ஒரு புதிய இயக்குனர் பல மாதங்கள் போராடி விஜயகாந்திடம் கதை சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் இவரை அலைகழித்த ஆபிஸ் நிர்வாகிகள் கேப்டனை நெருங்கவே விடவில்லையாம். காத்திருந்து காத்திருந்து பார்த்த இயக்குனர் கேப்டனின் காரை மறித்து புலம்பியிருக்கிறார். அவருக்கு அன்று மாலையே அப்பாயிண்ட்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. முழு கதையையும் பொறுமையாக கேட்டவர், கதை பிடிச்சிருக்கு. ஆனா பட்ஜெட் ரொம்ப அதிகமாக இருக்குமே என்றாராம்.

பதினொரு கோடி இருந்தால்தான் இந்த படத்தை எடுக்க முடியும் என்று இயக்குனர் சொல்ல, எனக்கு பிசினஸ் எட்டு கோடிதான். மூன்று கோடி நஷ்டத்தில் யாராவது படம் எடுக்க முன்வருவார்களா? என்று யோசித்த கேப்டன், உங்க போன் நம்பரை கொடுத்திட்டு போங்க. அரசாங்கம் ரிலீசுக்கு பிறகு நானே அழைக்கிறேன் என்று கூறியிருக்கிறாராம். ஒருவேளை சொந்தக் கம்பெனியில் தயாரிக்கலாம் என்று எண்ணியிருப்பாரோ?

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter