பெயரில்தான் தேன். உடம்பெல்லாம் விஷக்கொட்டுகளை வாங்கி வீங்கிப் போய்தான் இருந்தார் தயாரிப்பாளர் தேனப்பன். வல்லவன் படத்தில் சிம்பு கொட்டிய வலி, பிறகு நான் கடவுள் படத்தில் பாலா கொட்டிய வலி, எல்லாவற்றிற்கும் மருந்து தடவிக் கொண்டு மேற்படி பிரச்சனைகளில் இருந்து விடுபட்ட அவர், ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் துரை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதில் அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் பத்மபிரியா.
இந்நிலையில் திடீரென்று துரையிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார் அவர். ஏன்? எதற்கு? என்பதற்கு காரணம் புரியாத நிலையில் செய்தியை உறுதிப்படுத்துகிறார்கள் துரை யூனிட்டை சேர்ந்தவர்கள். வேறொரு ஹீரோயினை தேடி அதே மலையாள கரையோரத்தில் வலை வீச தொடங்கியிருக்கிறார்களாம்.
-ஆர்.எஸ்
|