First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
சென்னையில் நடைபெறவிருக்கும் உலகப்படவிழா
-பாலசந்தர், சத்யராஜ், சுஹாசினி முன்னிலையில் துவக்கம்

5-வது சென்னை இன்டர்நேஷனல் சினிமா படவிழா எதிர்வரும் 14-ந் தேதி சென்னையில் தொடங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் இருந்து 124 படங்கள் இந்த இந்த படவிழாவில் திரையிடப்பட உள்ளன. இதில் டாகுமென்டரி படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. துவக்க நாளன்று ஆஸ்கர் விருது பெற்ற தி லைப் ஆப் அதர்ஸ் என்ற படம் திரையிடப்படுகிறது.

பைலட் தியேட்டரில் மட்டும் 48 படங்களும், பிற படங்கள் வுட்லண்ட்ஸ், மற்றும் 5th International Award Filmதென்னிந்திய வர்த்தக சபை திரையரங்கிலும் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் பருத்தி வீரன், அம்முவாகிய நான் உள்ளிட்ட சில முக்கியமான தமிழ்ப்படங்களையும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கில சப்-டைட்டிலுடன் தான் இவை திரையிடப்படுகிறது.

துவக்கவிழாவில் கலந்து கொள்ள பாலசந்தர், சத்யராஜ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம். எந்தெந்த தியேட்டர்களில் என்னென்ன படங்கள் திரையிடப்படுகிறது என்ற விபரத்தை விழாவிற்கு முந்திய நாள் வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள் விழாக்குழுவினர். பொதுமக்கள் பார்க்க 500 ரூபாயும், மாணவர்கள் பார்க்க 300 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

-ஆர்.எஸ்.

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter