First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஜாதி, மதக்கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: சட்டப்பேரவையில் முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை - சீனாவில் பூகம்பம்: பல்லாயிரக்கணக்கானோர் பலி - விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் கட்சிகளுக்கு தடை விதிக்க சட்டப் பேரவையில் காங்கிரஸ் வலியுறுத்தல் - நவீன ஆயுதங்களுடன் எப்போதும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்
எனக்கு படிக்கிற பழக்கமே இல்லை!
-நூல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர்.

இயக்குனர் அமீரிடம் உதவி இயக்குனராக இருப்பவர் த.சந்திரா. எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் என்ற பன்முகம் கொண்டவர் சந்திரா. இவர் எழுதிய 'பூனைகள் இல்லாத வீடு' என்று சிறுகதை தொகுப்பை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாரதிராஜா, அமீர், கரு.பழனியப்பன், சிம்புதேவன், எஸ்.ராமகிருஷ்ணன், நா.முத்துக்குமார், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன், கவிஞர் வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

பொது மேடையை தங்களின் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்திக் கொள்ளும் சிலரில் Ameer Bharathirajaவெண்ணிலா முதன்மையானவராக இருப்பார் போலிருக்கிறது. மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களும், பார்வையாளர்களும் நெளிவதை பற்றிக் கவலைப்படாமல் பேசிக் கொண்ண்ண்ண்ண்டே... யிருந்தார். அந்த சிறுகதை தொகுப்பில் உள்ள அத்தனை கதைகளை பற்றியும் பேசி முடித்துவிட்டுதான் அமர்ந்தார்.

இதுபோல் வேறு சிலரும் மைக்கை பிடித்தால் என்னாவது? என்ற பயத்தில் சீக்கிரமே தன்னை பேச அழைக்குமாறு விழா அமைப்பாளர்களிடம் கேட்டுக் கொண்ட பாரதிராஜா, யாரும் பார்க்காத கோணத்தில் இந்த சிறுகதைகளை பார்த்தது ஆச்சர்யப்பட வைத்தது. என் மண்ணை சேர்ந்தவராக இருக்கிறார் சந்திரா. இந்த கதைகளை படித்தபோது நமது கிராமம் இன்னும் பின்தங்கி இருக்கிறதே என்ற எண்ணம்தான் வந்தது. எனக்கு 65 வயதாகிறது. நான் கிராமத்தை விட்டு சென்னைக்கு வரும்போது என் கிராமம், எப்படியிருந்ததோ, அதே கிராமம்தான் சந்திராவின் கதைகளிலும் இருக்கிறது. அப்படியென்றால், அவர் காலத்திலும் இந்த கிராமங்கள் முன்னேறவில்லை என்றுதானே அர்த்தம்? இது மிகவும் வருத்தத்திற்குரியது என்றார்.

தனக்கு படிக்கிற பழக்கமே இல்லை என்ற அமீர், தான் எவ்வளவு பெரிய படிப்பாளி Ameerஎன்பதை விவரித்தபோது அரங்கமே ஆரவாரம் செய்தது. நான் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதையைதான் அதிகம் படிப்பேன். அதைவிட்டால், தினகரனில் தினமும் வரும் சினிமா செய்தியை படிப்பேன். அவ்வளவுதான் எனக்கு படிப்பின் மீது இருக்கிற நாட்டம். சந்திராவை கூட படப்பிடிப்பில் அடிக்கடி திட்டுவேன். கதை ஈசியா எழுதலாம். இங்கே சினிமா எடுக்கறது எப்படின்னு கத்துக்கங்க என்பேன். ஆனால் இங்கே இவ்வளவு பெரிய மனிதர்கள் வந்து பாராட்டுகிற போதுதான் கதை எழுதுவது எவ்வளவு பெரிய விஷயம் என்பது தெரிந்தது என்றார். சந்திராவின் வெற்றிக்கு பின்னால் அவருடைய கணவர் வி.கே.சுந்தர் இருக்கிறார். நாம் முதலில் அவரைதான் பாராட்டவேண்டும் என்று அமீர் சொன்னபோது, அதை அடக்கத்தோடு ஏற்றுக்கொண்டார் சுந்தர்.

சந்திரா எழுதிய ஒரு கதையை மிக ஆழமாக விவரித்த கரு.பழனியப்பன் அவரின் எழுத்தாற்றலை வியந்தார். இப்படி பலரும் பாராட்டிய விழாவில், எழுத்தாளர் சாருநிவேதிதாவின் உரைதான் ஹைலைட்! நான் கிராமத்தை பார்த்தவன் இல்லை. சென்னையே கிராமம்னுதான் நினைச்சுட்டு இருக்கேன். இந்த கதைகளில் வரும் கிராமம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு என்றவர், தமிழ்சினிமா பற்றியும் பேச ஆரம்பித்தார். நான் அதிகமா தமிழ்ப்படம் பார்க்கறதில்லை. பதினொரு வருடத்திற்கு முன்பு மகாநதி படம் பார்த்திட்டு உடனடியாக ஒரு கட்டுரை எழுதினேன். அது காலச்சுவடு இதழில் வெளிவந்திச்சு. அதை படிச்சுட்டு கமல் போன் பண்ணுவாருன்னு நினைச்சேன். சமீபத்தில் தமிழ்சினிமா பற்றி வந்த சிறந்த சிறுகதைகளை தொகுப்பா வெளியிட்டிருந்தார் தியோடர் பாஸ்கரன். அதில் என்னுடைய கட்டுரையும் இடம் பெற்றிருந்தது. அதை படித்த கமல் நல்லாயிருக்குன்னு பாராட்டியதா பாஸ்கரன் சொன்னார். நல்லவேளை... பதினொரு வருடம் கழிச்சாவது பாராட்டினாரே என்றார் பலத்த கைதட்டல்களுக்கிடையில்.

சந்திராவின் அடுத்த மேடை, நல்ல தமிழ் படத்தின் துவக்கவிழாவாக இருக்க வேண்டும் என்று நாமும் வாழ்த்துவோம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

hotnews
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter