|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
செல்வராகவன், சோனியாவுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது - கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் என்ற விடுதலை சிறுத்தைகளின் விருது அறிவிப்பு - அதிமுக முன்னாள் தமிழக அமைச்சர் வீ.சுப்பிரமணியன் மரணம் - ஒபாமா நோபல் பரிசு பணத்தை தானமாக வழங்கினார் - புதிய சட்டசபை கட்டிடம் நாளை திறப்பு: பிரதமர் மன்மோகன்சிங், சோனியா வருகை - சென்னையில் 20 ரேஷன் கடைகளில் “வெப்”கேமரா வசதி: ரவுடி மாமூல், பொருட்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை - திபெத்தில் புத்த மதத்தை அழிக்க சீனா முயற்சி : தலாய்லாமா
சூர்யா-ஜோதிகா திருமணம்
கருணாநிதி, ஜெயலலிதா வாழ்த்து!

நடிகர் சூர்யா-ஜோதிகா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ரஜினி, கமல் உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்திட இவர்களது திருமணம் இனிதே நடந்தது. அது பற்றிய விபரம் வருமாறு;-

நடிகர் சிவக்குமாரின் வாரிசும், பிரபல இளம் முன்னணி நடிகருமான சூர்யாவிற்கும், அவருடன் பலப் படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஜோதிகாவிற்கும், இடையில் ஆரம்ப காலத்திலேயே காதல் ஏற்பட்டது. அதை இருவரும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுத்து வந்தனர். கடந்த மாதம் தங்களது காதலை வெளிப்படுத்தியதுடன் திருமண தேதியையும் அறிவித்தனர்.

அதன்படி, இன்று சென்னை பார்க் ஷெரட்டான் நட்சத்திர ஹோட்டலில் உள்ள மவுரீஸ் ஹாலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. மணமகள் ஜோதிகா, ரோஸ் கலரில் பட்டுப்புடவை ஜாக்கெட் அணிந்திருந்தார். மணமகன் சூர்யா பட்டுவேஷ்டி, பட்டு சட்டை அணிந்திருந்தார். முதலில் இருவரும் சிவக்குமார் தம்பதிகளுக்கு பாதபூஜை செய்து, பின்னர் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஜோதிகாவின் அம்மாவிடமும் ஆசி பெற்றனர்.

காலை 6.45 மணிக்கு முதல்வர் கருணாநிதி வந்தார். சூர்யா மணமேடையில் அமர்ந்த சில நிமிடங்களில் மணமகள் ஜோதிகாவை அவரது சகோதரி நடிகை நக்மா, மணமகள் தோழியாகி அழைத்து வந்து மணமேடையில் அமர வைத்தார். தலைகுணிந்தபடி வந்த ஜோதிகா மணமேடையில் வெட்கத்துடன் அமர்ந்திருந்தார்.

முதல்வர் கருணாநிதி தாலியை தொட்டு ஆசீர்வதித்து கொடுத்ததும் தமிழ் முறைப்படி தமிழ் மந்திரங்கள் ஓத, 7மணிக்கு ஜோதிகாவுக்கு சூர்யா தாலி கட்டினார். பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டார்கள். அப்போது மண்டபத்தில் அமர்ந்திருந்தவர்கள் மலர்களைத் தூவி வாழ்த்தினார்கள்.

பின்னர் மேடையில் இருந்து இறங்கிய தம்பதிகள், முதல்வர் கருணாநிதி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர். தலையில் கை வைத்து அவர்களை ஆசீர்வதித்து, மலர் கொத்துக்களைக் கொடுத்து வாழ்த்தினார் முதல்வர்.

சூர்யாவின் ¬¬யில் முத்தமிட்டு கன்னத்தை தட்டிக் கொடுத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தார். சிவக்குமார் இதை நெகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு நின்றார். அதன்பிறகு மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக வி.ஐ.பி கள் எல்லோரும் வரிசையில் நின்று மணமக்க¬¬ வாழ்த்தினர்.

அவர்களின், வாழ்த்தை பெற்றுக் கொண்ட தம்பதிகள் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு, உடைமாற்றி 9.20 மணிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார்கள்.

காலை 10.20 மணிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வந்தார். அவரை சிவக்குமார் வரவேற்றார். அவர் காலில் விழுந்து மணமக்கள் ஆசி பெற்றனர். அவரைத் தொடர்ந்து ரஜினி, கமல், இளையராஜா.., உள்பட பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமண விழாவையட்டி ஹோட்டலைச் சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொது மக்களும், ரசிகர்களும் அனுமதிக்கப் படவில்லை. அ¬¬ப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

 

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter