|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

தசாவதாரம் ஸ்பெஷல்!

ஒரு மன்னன்
ஒரு வில்லன்
ஒரு இளைஞன்
ஒரு வெள்ளைக்காரன்
ஒரு ஒல்லிப்பிச்சான்
ஒரு பயில்வான்
ஒரு கிழவி

இப்படி... 10 வேடங்களில் கமல் நடித்துவருகிறார் தசாவதாரம் படத்தில்.

இந்தப் படத்தில் மன்னர் கமலுக்கும் ஒரு பண்டிதர் நெப்போலியனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பண்டிதர் சாபமிடுகிறார். இதற்காக கும்பகோணத்தில் ஒருகோயிலில் படப்பிடிப்பு நடத்தவேண்டியிருந்தது. ஆனால் கோயிலில் படப்பிடிப்பு நடத்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பழமையும் பாரம்பரியமும் மிக்க தராசுரம் கோயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்தினால் அதன் புனிதம் கெட்டுவிடும் என எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தக்கோயில் காட்சியை மிக தத்ரூபமாக கிராஃபிக்ஸில் கொண்டுவரவிருக்கிறார்கள். இதற்கான ஸ்பெஷல் கேமரா இந்தியாவில் இல்லை. இதனால் பிரசாத் லேப் வெளிநாட்டிலிருந்து இந்த கேமராவை இறக்குமதிபண்ணியிருக்கிறது. இந்தக் கேமராவை இயக்குவதற்கென்றே ஆஸ்திர«லியாவில் இருந்து ஒரு கேமராமேனும் வரவழைக்கப்பட்டிருக்கிறார்.

இந்தக் காட்சி குறித்து விவாதிப்பதற்காக ஏவி.எம். ஸ்டுடியோவில் கேமராமேன் ரவிவர்மனை சந்திக்க, அந்த ஆஸ்திரேலியாக்காரர் வருவதாக இருந்தது. அதற்குள் ஒரு வெள்ளைக்காரர் ஏவி.எம். ஸ்டுடியோவுக்குள் நுழைய... அவரிடம் கேமராவிவாதம் பண்ணியிருக்கிறார் ரவிவர்மன். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த ஆஸ்திரேலியாக்காரர் வந்தார். அப்புறம்தான் தெரிந்தது... ஆஸ்திரேலியாக்காரர் என நினைத்துக்கொண்டு வெள்ளைக்கார வேஷம் போட்டிருந்த கமலிடம் ரவிவர்மன் பேசிக்கொண்டிருந்தாராம். அந்தளவுக்கு தத்ரூபமாக மேக்கப் அமைந்திருந்திருந்தது.

இதேபோல் 92 வயது பணக்கார மூதாட்டியாக குழந்தைகளுக்கு இசை சொல்லித்தரும் கிழவியாக ஒரு கேரக்டரில் நடித்து அசத்தியிருக்கிறாராம் கமல்.

-செல்வன்

 

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter