| இளையராஜாவின் சிம்பொனி சர்ச்சை!
-யுவன்சங்கர்ராஜா பதில்! |
| |
படம் காதல் படம். ஆனால் படத்தில் ஒரு டூயட் கூட கிடையாது |
அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது. சேரன் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் இது. சமூக நோக்கோடு கதை பண்ணுகிற சேரன், இந்த படத்தின் இயக்குனர் விஜய் மில்டனுக்கு கொடுத்த சுதந்திரத்தின் விளைவுதான் இந்த அழகான காதல் கதை என்கிறார்கள் படத்தின் கதையை அறிந்தவர்கள்.
இப்படத்தின் ஆடியோ போட்டோலீஸ் விழாவின் போது இரண்டே இரண்டு பாடல்களை ஒளிபரப்பினார்கள். இளமை வழிய வழிய உருவாக்கப்பட்டிருந்த அந்த பாடல்கள் உருவான பின்னணியை விவரித்தார் இயக்குனர். வழக்கமா பாடல்களை கம்போஸ் பண்ணிய பிறகுதான் ஷ§ட் பண்ணுவோம். இந்த படத்தில் பாடல் காட்சிகளை ஷ§ட் பண்ணிய பிறகு அதற்கேற்ப ட்யூன் போட்டார் யுவன் என்றார் விஜய் மில்டன். படம் காதல் படம். ஆனால் படத்தில் ஒரு டூயட் கூட கிடையாது என்று இன்னொரு ஆச்சர்யத்தையும் கூடவே கொளுத்தி போட்டார் மில்ட்டன்.
அழகாய் இருந்தா ஏன் பயம் வரணும்? எல்லாருக்கும் தோன்றுகிற கேள்வி நமக்கும் தோன்ற, தயக்கமில்லாமல் மில்ட்டனிடம் கேள்வியை பாஸ் செய்தோம். அதுதான் படமே! படத்தை பார்த்தா உங்களுக்கு தெரியும், இது எவ்வளவு பொறுத்தமான தலைப்பு என்று! சொன்னவர், இதுவரை பல படங்களுக்கு கோமிராமேனாக வொர்க் பண்ணியிருக்கேன். அப்போதெல்லாம் கேமிராவை இயக்குவதோடு டைரக்டர் செய்கிற வேலையையும் கவனிச்சுகிட்டு இருப்பேன். இன்னிக்கு என்னை டைரக்டரா ஆக்கியது அந்த ஆர்வம்தான் என்றார்.
விழாவிற்கு வந்திருந்த யுவன்சங்கராஜாவிடம், அப்பா இசையமைத்த சிம்பொனி பற்றி சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்திருக்கே, அது பற்றி உங்க கருத்து என்ன? என்று கேட்டதற்கு, அது பற்றி பேச எனக்கு வயசும் இல்லை. அனுபவமும் போதாது என்றார் ஒரு சின்ன எச்சரிக்கையுடன்!
-ஆர்.எஸ்.அந்தணன் |