Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

இந்திய ராணுவத்தின் பெருமையை சொல்லும்
'அரண்'

நடிகர் கமல் நெகிழ்வு!

'இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை யாரும் படப்பிடிப்பு நடத்திராத ஆப்கானிஸ்தானில் 'அரண்' படத்தின் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

"போரின் வெப்பம் அதிகம் தாக்காத தமிழர்களுக்கு இந்திய ராணுவத்தின் தியாகம் அதிகமாகத் தெரியவில்லை,
எனக்கும்தான்.
நானும்
பரமக்குடி
தமிழன்தானே!"

மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்ட நவாப், ஆப்கானிஸ்தான் சென்று அங்குள்ள மரண தண்டணை பெற்ற கைதிகள் சிலரை அந்த அரசாங்கத்தின் அனுமதி பெற்று இந்தியாவுக்குள் ரகசியமாக ஊடுருவச் செய்து சதி வேலைகள் சிலவற்றை செய்து இந்தியாவின் ஆணிவேரான அமைதியை வேரறுக்க நினைக்கிறார்.

மேற்கண்ட இந்தக்காட்கிகள்தான் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் சிறப்பு அனுமதி பெற்று படமாக்கப்பட்டது.

பல வெற்றிப்படங்களை தாயரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்து வரும் படம் அரண்.

இப்படத்தில் மோகன்லால், ஜீவா இருவரும் கதாநாயகர்களாக

நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக கோபிகா, லட்சுமிகோபால்சாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

'காதல்' படத்திற்கு இசையமைத்த ஜோஷ்வாஸ்ரீதர் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலர் வெளியீடு கமல் தலைமையில் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இவ்விழாவில் கமல்ஹாசன் மிகவும் தேசபக்தியோடு பேசினார்...

"போரின் வெப்பம் அதிகம் தாக்காத தமிழர்களுக்கு இந்திய ராணுவத்தின் தியாகம் அதிகமாகத் தெரியவில்லை, எனக்கும்தான். நானும் பரமக்குடி தமிழன்தானே!

ஆனால் ஜில்லிடவைக்கும் பனிமுகட்டில் எந்நேரமும் எதுவும்

நடக்கலாம் என்ற திகில் சூழலில் அவர்கள் சிந்தும் தியாக வியர்வையை நேரில் பார்த்தால் நமது ராணுவம் தினமும் கொண்டாடப் படக்கூடிய பெருமைக்குரியது என்பது புரியும்!

நமது ராணுவம் உலகின் தலைசிறந்த ராணுவங்களில் ஒன்று அதன் பெருமையைப் பற்றி படம் எடுத்திருப்பதன் மூலம் நம்மையும் அறியாமல் தேசிய சேவை செய்திருக்கிறோம். சௌத்ரி சாருக்குப் பாராட்டு.

இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் நிஜத்தில் ஒரு ராணுவ மேஜர். அவர் ராணுவத்தில் பல அதிரடி சாகசங்கள் புரிந்தவர் அவற்றை என்றைக்குமே வெளியே சொல்ல முடியாது. அவையெல்லாம் ராணுவ ரகசியம்" என்று நெகிழ்ந்து கூறினார் கமல்.

-சுப்பிரமணியன்.

Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter