First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தேசிய திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்: ரஜினி ஒப்புதலின்றி அவரது ரசிகர்கள் புதுக்கட்சி துவக்கம் - முதல்வர் கருணாநிதி வற்புறுத்தலை தொடர்ந்து இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் - ஈழத்தமிழர் பிரச்சனை கருணாநிதி ஆட்சியிலேயே முடிவுக்கு வந்துவிடும்: அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு - பொய் வழக்கை கண்டு அஞ்ச மாட்டேன்: விஜயகாந்த் பேச்சு

இந்திய நடிகர்கள் கையெடுத்து கும்பிடும்
ஒரே நடிகர் கமல் -ரஜினி பெருமிதம்

பி.வாசுவின் மகன் ஷக்தி அறிமுகமாகும்
'தொட்டால் பூ மலரும்'
படத்தொடக்க விழா சுவாரஸ்யங்கள்
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரனும் கலந்துகொண்டார்!!

இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷக்தி 'தொட்டால் பூ மலரும்' என்ற படத்தில் அவரது அப்பாவின் இயக்கத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே பி.வாசுவின் 'நடிகன்', 'சின்னத்தம்பி' ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இந்தியாவில் தமிழர்களாகட்டும், இந்தி, மலையாளம், மராட்டியர்களாகட்டும், ஒரு நடிகனை பார்த்து கும்பிடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறவர் கமல். அவரைபோன்று பி.வாசுவின் வாரிசு ஷக்தியும் உயரவேண்டும். இவ்வாறு கூறினார் ரஜினி.

'தொட்டால் பூ மலரும்' படத்தின் தொடக்க விழா சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜூலை 3ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், பிரபு, சத்யராஜ், தெலுங்கு நடிகர் என்.டி.ஆர்.பாலகிருஷ்ணன்,நடிகைகள் ஜெயப்பிரதா, ஸ்ரீப்ரியா தயாரிப்பாளர் ஏவி.எம் சரவணன் உள்பட பலரும் கலந்து கொண்டு இவ்விழாவில் சிறப்பித்தனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் தன் மனைவி மதிமலருடன் வந்திருந்தார். அவரை ரஜினி, கமல் உள்ளிட்ட கலைஞர்கள் கைகுலுக்கி நலம் விசாரித்தனர்.

விழாவிற்கு ரஜினிகாந்த் முன்கூட்டியே வந்துவிட்டார். காலை 9.30 மணிக்கு வந்து கமல் வருகைக்காக காத்திருந்தார். கமல் 10 மணி சுமாருக்கு வந்து சேர்ந்தார். இருவரும் கட்டி தழுவி கைகுலுக்கி கொண்டனர். உடனே விழா தொடங்கியது. எல்லோரும் மேடைக்கு சென்றனர்., மேடையில் கமல் ரஜினி இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சிக்கு பின் இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது:-

இந்தியாவில் தமிழர்களாகட்டும், இந்தி, மலையாளம், மராட்டியர்களாகட்டும், ஒரு நடிகனை பார்த்து கும்பிடும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறவர் கமல். அவரைபோன்று பி.வாசுவின் வாரிசு ஷக்தியும் உயரவேண்டும். பெரிய வீட்டுபிள்ளையாக இருந்தாலும் எல்லா வீட்டுக்கும் பிள்ளையாக பழகுபவர் பிரபு. நடிகையாக இருந்து எம்.பி யாக நின்று ஜெயித்து எம்.பியாகி பெரிய புகழ் அடைந்து இருப்பவர் ஜெயப்பிரதா, இவர்கள் எல்லாம் இந்த மேடையில் பி.வாசுவின் மகன் ஷக்தியை வாழ்த்த வந்துள்ளார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் திருப்புமுனை ஏற்படும் எனக்கு திருப்புமுனையாக வாசு இருந்துள்ளார். பணக்காரன், உழைப்பாளி, மன்னன், என்று திருப்புமுனை படங்களை தந்துள்ளார். சின்னத்தம்பியும் பிரபுவுக்கு திருப்புமுனை படம்.

சந்திரமுகி மூலம் நான், அவருக்கு திருப்புமுனை கொடுத்ததாக வாசு சொன்னார். அப்படி அல்ல... சந்திரமுகி என்ற திருப்புமுனை படத்தை கொடுத்தது. நீங்கள்(வாசு)தான். நீங்கள் கொடுத்ததால்தான் நான். ராம்குமார், பிரபு இன்று நிம்மதியாக இருக்கிறோம்.

30, 40 படங்கள் கொடுத்தாலும் கடைசிபடம் எப்படி என்றுதான் கேட்பார்கள் கடைசி மேட்ச்சில் கோல் போடவில்லை என்றால் அவ்வளவுதான். என்று டைமிங்காக (உலககோப்பை கால்பந்தாட்டம் நடந்து வரும் வேளையில்...) பேசியவர் தொடர்ந்து...

வாசு ஒரு எனர்ஜிசென்டர். பேட்டரி டவுன் ஆச்சுனா வாசுகிட்ட சார்ஜ் போட்டுக்கலாம். அவர், சார்ஜ் ஏத்திவிடுவார். நல்ல நண்பனாக தமிழனாக வாழ்கிறார்.

வெளியே போகும் போது என் அப்பா முகத்தை பார்த்து விட்டுதான் போவேன் என்பார். இப்போதைய திரை உலகில் உள்ளே நுழைவது சுலபம். 1950 மற்றும் 60,70-ம் ஆண்டுகளில் சினிமா உள்ளே நுழைவது கஷ்டம். 80-க்கு பின் நிலைமை மாறிவிட்டது. இப்போது உள்ளே நுழைவது சுலபம். அங்கே நிலைத்து இருப்பது கஷ்டம்.

பிரபுக்கு சின்னதம்பி கொடுத்தார். சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல் கொடுத்தார். எனக்கு சந்திரமுகி கொடுத்தார். அதுமாதிரி அவர் உழைப்பை தனது மகனுகு இந்த படத்தில் 100 சதவீதம் கொடுப்பார். இதன்பிறகு கஷ்டப்பட்டு திரையுலகில் நிலைத்து நின்று தந்தை பெயரை ஷக்தி காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ரஜினிக்கு முன்னதாக கமல், ஜெயப்பிரதா, ஏ.வி.எம் சரவணன் உள்ளிட்டோர் புது முகம் ஷக்தியை வாழ்த்தி பேசினர்.

இப்படதொடக்க விழா முடிந்ததும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த புதுமுகம் ஷக்தி தனது இயற்பெயர் பிரஷாந்த் என்றும் அதே பெயரில் ஏற்கனவே பிரபல நடிகர் ஒருவர் இருப்பதால் தன் பெயரை ஷக்தி என்று சினிமாவிற்காக மாற்றி அமைத்து கொண்டதாகவும் தன் தாயின் விருப்பத்திற்காக எம்.பி.ஏ படித்து முடித்ததாகவும் தந்தை மற்றும் தனது விருப்பம் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் எனக்கூறினார். அப்பொழுது ஷக்தியின் தந்தை பி.வாசுவும், தாத்தா (எம்.ஜி.ஆர். காலத்து மேக்கப்மேன்) பீதாம்பரமும் உடனிருந்தனர்.

-ஆர்.எஸ்.கே.

hotnews
.
.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter