| ஏய் பூக்காரி...
வசுந்தரா பேட்டி |
| |
தமிழ் சினிமாவின் கவர்ச்சி மார்க்கெட்டால் கதாநாயகிகளுக்கு மதிப்பு இல்லை. ஹீரோக்களின் பின்னால் காதல் கொண்டு அலைவதும், கவர்ச்சியாக உடலை காட்டி ஆடுவதுமாக சித்தரிக்கப்படுகிறார்கள் | 'ஹேராம்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமிழ்ப் பின்னணி பாடகி வசுந்தராதாஸ். சிட்டிஸன் மற்றும் ஹேராம் சரியாக போகாததால் தோல்விப்பட்டியலில் சேர்ந்தார். தற்போது சில மாதங்களாக பின்னணி பாடுவதிலும், பாட்டுக் கச்சேரிகள் நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வந்தவர், எடையையும் குறைத்துள்ளார்.
தற்போதைய செய்தி இந்தி படங்களிலும் வசுந்த்ரா நடிக்க தொடங்கி இருப்பது தான். 'ஏக்தஸ்தாக்' என்ற படத்தில் கம்பீரமான வருமான வரித்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். அவர் நமக்கு அளித்த பேட்டியில் கூறியவை;
என் அழகையும், குரலையும் வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்திய தமிழ் திரைப்படங்களில் நடிக்க எப்போதும்,இப்போதும் ஆசையாக இருக்கிறது. பல தயாரிப்பாளர்கள் என்னை அழைத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழ் சினிமாவின் கவர்ச்சி மார்க்கெட்டால் கதாநாயகிகளுக்கு மதிப்பு இல்லை. ஹீரோக்களின் பின்னால் காதல் கொண்டு அலைவதும், கவர்ச்சியாக உடலை காட்டி ஆடுவதுமாக சித்தரிக்கப்படுகிறார்கள். இதுபோன்று நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. பெண்களை முதன்மைப்படுத்துகிற கதாபாத்திரங்களில் என்றும் தயாராக இருக்கிறேன்.
நான் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவோ, நடிப்பை துறந்ததாகவோ என்றும், எப்போதும் கூறியதில்லை. இசைக் கச்சேரிகள் நடத்துவதிலும், அதில் எனது திறமையை வளர்த்துக் கொள்வதிலும் சர்வதேச தரத்துக்கு நம் இசை நிகழ்ச்சியை கொண்டு செல்வதற்காகவும் மும்முரமாக பணியாற்றினேன். ஆகையால் சினிமாவில் நடிக்க நேரம் இல்லாமல் போய்விட்டது. மேலும் எனக்கெற்ற நல்ல கேரக்டர்கள் அமையவில்லை என்பது முக்கிய காரணம்.
இந்தி படங்களில் நடிப்பதில் ஆர்வமில்லாமல் இருந்தாலும். வடஇந்திய இசை மேடைகளில் என்னை பார்த்து விட்டு பிரபல இயக்குனர்கள் தொடர்ந்து நடிக்க வற்புறுத்தி வந்தார்கள். அதனால் நடிக்க என் மனது ஒத்துக்கொண்டது. 3 படங்களில் நடித்து வருகிறேன், நடிப்பில் தீவிரமாக இறங்கி விட்டாலும் பாடுவதை கைவிட மாட்டேன், நடிப்பு மற்றும் பாட்டு இரண்டிற்கும் சம வாய்ப்பு வழங்கிட வேண்டுமென்பதே குறிக்கோள்.
இந்தியில் வசுந்த்ராவின் ராசி எப்படின்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.
-செல்வன் |