|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்

தனுஷோடு லிப் கிஸ்...
-ப்ரியா மணியின் ஃப்ரீயான பேட்டி


சிவனேன்னு இருக்கேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? அவ என்ன மாதிரி நடிக்க விரும்புறாளோ, அதில் நான் தலையிடறதேயில்லை. அவளோட நடிப்பு ஆர்வத்துக்கு குறுக்கே நிற்க கூடாதுன்னுதான் அவளை நடிக்கவே அனுமதிச்சேன்

வாய் ஓயாமல் பேசுவதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! இதை நிருபிப்பதற்காகவே அவதாரம் எடுத்தது போல் பேசிக் கொண்டேயிருந்தார் ப்ரியாமணி. முதல் படமான வசீகராவில் ஆரம்பித்து, லேட்டஸ்டாக நடித்துக் கொண்டிருக்கும் பருத்தி வீரன் வரைக்கும் அவர் வரிசை கட்டிக் கொண்டு பேச, மூட் அவுட் பண்ணுவதற்காகவே இந்த கேள்வியை கேட்டு வைத்தோம்.

நீங்கள் கவர்ச்சியாக நடிக்க மறுப்பதாகவும், உங்கள் அம்மாதான் உங்களை கவர்ச்சியாக நடிக்க வற்புறுத்துவதாகவும் சொல்கிறார்களே? பக்கத்தில் இருந்த அம்மாவுக்கு கோபம் மூக்குமேல் வந்து, மூக்கே சிவந்தது.

சிவனேன்னு இருக்கேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க? அவ என்ன மாதிரி நடிக்க விரும்புறாளோ, அதில் நான் தலையிடறதேயில்லை. அவளோட நடிப்பு ஆர்வத்துக்கு குறுக்கே நிற்க கூடாதுன்னுதான் அவளை நடிக்கவே அனுமதிச்சேன் என்கிறார் மாறாத கோபத்துடன். மீண்டும் பட்டாம்பூச்சி வாய் திறந்தது.

பருத்திவீரன் படத்திலே எல்லாமே டைரக்டர் அமீர் சார் சொல்றதுதான். அந்த படத்தோட கதை என்னன்னு கூட எனக்கு தெரியாது. வந்து நில்லுன்னா நிப்பேன். இப்படி நடின்னா நடிப்பேன். அவ்வளவுதான். எங்கிட்ட அந்த படத்தோட கதை என்னன்னு கேட்டா நான் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கு கதையே என்னன்னு தெரியாது. சொல்லிக் கொண்டே போகிறவரை மறுபடியும் சீண்டி பார்த்தாலென்ன...

நீங்க நடிச்சி தீபாவளிக்கு வெளிவரப்போற அது ஒரு கனாக்காலம் படத்திலே தனுஷோடு கிஸ்ஸிங் சீன் இருக்கு போலிருக்கே. அதுவும் உதடோடு உதடு வச்சு....?

அதை லிப் கிஸ் என்று சொல்ல மாட்டேன். ஆனா, அதுக்காக லிப் கிஸ் இல்லைன்னும் ஆகாது. அது ஒரு மாதிரியான கிஸ். படத்திலே ஆபாசமா நடிக்கிறியேன்னு அடுத்த கேள்வி கேட்பீங்க. நானே சொல்லிடறேன். கவர்ச்சியா நடிப்பேன். ஆபாசமா நடிக்க மாட்டேன் (ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க...)

அழகா இருக்கீங்க... கவர்ச்சியா நடிக்கிறீங்க.. அப்படியும் சொல்லிக் கொள்ளும்படி நிறைய படங்கள் இல்லையே என்றால், பருத்தி வீரன் வரட்டும். வந்ததும் சொல்லுங்க என்கிறார் ப்ரியாமணி சின்ன எதிர்பார்ப்புடன்.

அடுத்த தீபாவளிக்கு பேசக்கூட நேரமில்லாமல் நடிக்கணும். முன்னணி நடிகையா திகழணும். மனசில் நினைத்ததை சொல்லிவிட்டு விடை பெற்றோம்.

-ஆர்.எஸ்.அந்தணன்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter