|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாமக தலைமையில் 3வது அணிக்கு தயார்: டாக்டர் ராமதாஸ் - நிரூபம ராவ், மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு - காமன்வெல்த் போட்டி நாட்களில் டெல்லியை தகர்க்க தீவிரவாதிகள் சதி; அமெரிக்கா புதிய எச்சரிக்கை - ஸ்ரீதேவி படத்தில் நடிக்க அசின் மறுப்பு -

அஜீத் நடிக்கும் திருப்பதி என் கதை...
-உதவி இயக்குனர் புகார்! திகைப்பில் ஏ.வி.எம்!


கடவுள் படத்தின் முன்னே ஒரு சூடத்தை கொளுத்தி அணைக்கிறேன். அவரையும் தைரியமிருந்தால் அணைக்க சொல்லுங்கள்

நாளரு பஞ்சாயத்தும் பொழுதொரு தீர்ப்புமாக பிசியாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தில் கடந்த வாரம் வந்த வழக்கு ஒன்று அத்தனை பேரையும் லேசாக குலுக்கி போட்டிருக்கிறது. கண்ணியத்திற்கும் கம்பீரத்திற்கும் பெயர் போன ஏ.வி.எம் பற்றி யாராவது புகார் கொடுத்தால் எப்படியிருக்கும்? அதுதான் நடந்தது.

அஜீத் நடிக்கும் திருப்பதி படத்தின் கதை என்னுடையது என்று தயாரிப்பாளர் சங்கத்தின் கதவை தட்டியிருக்கிறார் ஒரு உதவி இயக்குனர். ரூம் வாடகை, மெஸ் பில் இப்படி எதற்காகவாவது பணம் தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் திருவாளர் உ.இயக்குனர், இதுபோன்ற குறுக்கு வழிகளில் ஈடுபடுவது சகஜம்தான். அப்படிதான் இதுவும் என்று நினைத்திருந்த தயாரிப்பாளர்கள் சங்கம், உ.இ-யை விசாரிக்க, வந்து விழுந்த தகவல்கள் அதிர்ச்சி ரகம்.

திருப்பதி படத்தின் கதையை வரி விடாமல் ஒப்பித்தாராம் உ.இ. அது மட்டுமல்லாமல் இப்படத்தின் கதையை எப்போது, எங்கே ஏ.வி.எம் தலைவரிடம் சொன்னேன் என்பதையும் சொல்லியிருக்கிறார். கூடவே, இது என் கதையில்லை என்று தலைவர் மறுக்கிற பட்சத்தில் கடவுள் படத்தின் முன்னே ஒரு சூடத்தை கொளுத்தி அணைக்கிறேன். அவரையும் தைரியமிருந்தால் அணைக்க சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அதுவரைக்கும் உ.இ சொல்வது சும்மா என்று சொல்லிக் கொண்டிருந்த அந்நிறுவன தலைவர், இப்போது ஜகா வாங்குகிறாராம். பேரம் நடந்து கொண்டிருக்கிறது. பிரச்சனை முற்றினால் கோர்ட்தான் என்று குமுறுகிறார் உ.இ!

என்ன நடக்க போகிறதோ?

-வம்பன்.

.
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter