| எனக்கு எதிராக சதி நடக்கிறது!
-சினேகா குமுறல்! |
| |
என் வளர்ச்சி பிடிக்காத யாரோ தொடர்ந்து எனக்கு எதிராக சதி செய்கிறார்கள். |
நவம்பர் 15-ந் தேதி செய்திதாள் ஒன்றில் இவர்தான் சினேகாவின் வருங்கால கணவர் என்று படத்துடன் செய்திகள் வர, நொந்து போனார் சினேகா! மிகச்சரியாக 11-45 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் சினேகா என்று செல்போன் சிணுங்கியது. குறிப்பிட்ட இடத்தில் ஆஜர் ஆனோம்.
வழக்கம்போல் தலைக்கு ஒரு ரப்பர் பேண்ட் கூட போடாமல் வந்த சினேகா, தன் வழக்கமான தன் அழகு புன்னகையை வீட்டிலேயே வைத்துவிட்டு படபடவென்று பொறிந்தார். விழுந்த நெருப்பு பொறிகளிலிருந்து..
நீங்களும் நாகா ரவி என்பவரும், நெருக்கமாக உள்ளது போல் இன்டர்நெட்டில் படங்கள் வந்திருக்கிறதே? நான் அந்த படங்களை பார்க்கவில்லை. அப்படி யாருடனும் நான் நெருக்கமாக இல்லை. அவைகள் கிராபிக்ஸ் முறையில் தயாரிக்கப்பட்ட படங்களாக இருக்கலாம். என் வளர்ச்சி பிடிக்காத யாரோ தொடர்ந்து எனக்கு எதிராக சதி செய்கிறார்கள்.
உங்களை பற்றி வந்துள்ள படங்களை இன்னும் நீங்கள் பார்க்காதது ஏன்? இன்று காலையில்தான் வந்தேன். நேரம் இல்லை. அந்த படங்களை பார்க்கவும் விரும்பவில்லை.
நாளிதழ்களில் வந்த படங்களில் உங்கள் அருகில் இருப்பவர் யார்? அவர் என் அண்ணனின் நண்பர் ரவி. ஒரு தெலுங்கு படத்தின் கேசட் வெளியீட்டு விழாவிற்கு நான் சென்றிருந்தபோது நானும் வருகிறேன் என்று ஆசை ஆசையாக கேட்டார். அழைத்து சென்றேன். எந்த ரசிகர் என்னோடு விழாவிற்கு வருகிறேன் என்று சொன்னாலும் அழைத்து செல்வேன். நான் இந்தளவுக்கு பேரும் புகழோடும் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களை கூட அழைத்து போவதில் என்ன தவறு? நாகா ரவியை உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? எனது அண்ணனின் நண்பராக தெரியும். மலேசியாவில் சில முறை சந்தித்திருக்கிறேன். அவ்வளவுதான்.
அவருடன் நீங்கள் இருக்கும் படங்கள்தான் வெளியாகியுள்ளன. இது அவரது சதியாக இருக்கும் இல்லையா?
அப்படி நினைக்கவில்லை. அவருடைய படத்தையும் யாராவது கிராபிக்ஸ் செய்திருக்கலாம். ஆனால் இது சதி வேலைதான் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
இதற்காக என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்? நான் தனி ஆள் இல்லை. அப்பா அண்ணனுடன் கலந்து பேசி மேற்கொண்டு என்ன செய்வதென்று முடிவு செய்வேன். படம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படும் செப்டம்பர் 13-ந் தேதி நீங்கள் எங்கிருந்தீர்கள்? எனக்கு நினைவில் இல்லை. அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கி கொள்கிறீர்களே? அதுதான் சொன்னேனே? எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று. அவர்கள் என்று கண்டுபிடிக்க நான் சி.பி.ஐ அதிகாரி அல்ல. உலகத்திலேயே என்னை பற்றிதான் அதிக கிசுகிசு வந்திருக்கிறது என்று கடுகடுத்த சினேகா, இது குறித்து போலீசில் புகார் தெரிவிப்பாரா என்று கேட்டதற்கு மட்டும் போட்டோடையாக பதில் சொல்ல மறுத்துவிட்டார்.
இந்த பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் படங்கள் யாவும், தெலுங்கு இணைய தளம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டவை. படத்தில் இருப்பவர்தான் நாகா ரவி. இந்த படங்களில் கிராபிக்ஸ் வேலைகள் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை வாசகர்களாகிய உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறோம்.
-ரகுவண்ணன் |