| கற்புங்கிறது சாப்பிடுற மாதிரி ஒரு மேட்டர்!
-சத்யராஜ் பேட்டி |
| |
கற்புங்கறது சாப்பிடற மாதிரி ஒரு மேட்டர். அவ்வளவுதான். அதை போய் மூணு மாசமா இழுத்திட்டு இருக்கீங்களே. பத்திரிகைகள்தான் இந்த விவகாரத்தை பெரிசு படுத்திகிட்டு இருக்கு. |
எல்லா படத்தின் கதைகளையும் ஒரு வரியில் சொல்லிவிடலாம். சத்யராஜ் நடிக்கும் 'வணக்கம் தலைவா' படத்தின் கதையையும் ஒரு வரியில் சொல்லுங்களேன் என்றால், "மப்புல போனா தப்புல முடியும்" என்றார் ஒரே வரியில்! இப்படி சொல்லியவர் யாராக இருக்க முடியும்? நம்ப சத்யராஜேதான். லொள்ளானந்தா என்று பெயரே வைக்கலாம் அவருக்கு. நாம் போயிருந்த போது மழை கொட்டிக் கொண்டிருந்தது. தூரத்திலேயே நம்மை பார்த்தவர் தலைக்கு மேல் கைகளை வைத்து மறைத்து கொண்டு ஓடிவந்தார். ஒன்றிரண்டு மழைத்துளிகள் அவர் மேல் விழ, ஏன் சார் மழையில ஓடி வர்றீங்க? என்றோம்.
நான் நனைஞ்சா பரவாயில்லை. நம்ப விக் நனைஞ்சுட கூடாது பாருங்க என்றார் கேஷ§வலாக! அதுதான் சத்யராஜ்! அன்றைய தினம் அபிநய ஸ்ரீ, பாபிலோனா என்று குஜிலிகளோடு கும்மாள பாட்டு பாடிக்கொண்டிருந்தார் மனிதர்.
உங்க பையனே இப்படி ஆட வந்திட்டாரு. இன்னும் நீங்க வயசு பிள்ளைகளோட ஆடிகிட்டு...? வாய் வரைக்கும் வந்ததை கேட்டேவிட்டோம்.
கவர்ச்சி ஆட்டம்ங்கிறது இன்னிக்கு நேற்றா இருக்கு? கிட்டப்பா, பாகவதர் காலத்திலே கூட இருந்திருக்கு. நான் ஆடினா இன்னமும் ரசிக்கிறாங்க இல்லையா? என்றவரிடம், மெல்ல குஷ்பு விவகாரம் பற்றி ஆரம்பித்தோம். படபடவென்று கொட்ட ஆரம்பித்தார்.
கற்புங்கறது சாப்பிடற மாதிரி ஒரு மேட்டர். அவ்வளவுதான். அதை போய் மூணு மாசமா இழுத்திட்டு இருக்கீங்களே. பத்திரிகைகள்தான் இந்த விவகாரத்தை பெரிசு படுத்திகிட்டு இருக்கு. கற்புங்கிறது கற்பிதம். நமக்குள்ளே வகுத்துகிட்ட ஒரு விஷயம். இது பற்றி ஆளுக்கொரு கருத்து இருக்கும். குறிப்பிட்ட எல்லையை தாண்டி பேசும்போதுதான் சிக்கல் வந்திடுது. இந்த விஷயத்தை பற்றி நான் எதுவும் பேச போறதில்லை. லைம் லைட்ல இருக்கிறவங்க பார்த்து பேசணும். அதுதான் நான் சொல்ல விரும்புற விஷயம்.
நடிகை சுஹாசினி தமிழர்கள் சார்பா குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டிருக்காங்களே?
நானும் தமிழன்தான். என் சார்பா மன்னிப்பு கேட்க சுஹாசினி யார்? இதுபற்றி நான் அதிகம் பேச விருப்பலை. ஏன்னா நடிகர் சங்கம்கிற ஒரு அமைப்பு இது பற்றி பேசிகிட்டு இருக்கும்போது தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது.
இந்த படத்தில் எழு கெட்டப்பில் நடிக்கிறாராம் சத்யராஜ். சரி... பெரியார் கெட்டப் எப்போ போடப் போறீங்க? என்றால்,
பாரதி படத்தை எடுத்து எல்லாரின் பாராட்டுகளையும் அள்ளிட்டு போன ஞான ராஜசேகரன்தான் பெரியாரின் கதையை படமா எடுக்கிறார். குறைந்த பட்ஜெட்ல இந்த படத்தை எடுக்காம, அதிக பொருட் செலவில் எடுக்கிற திட்டத்தில் இருக்கார். ஆங்கிலத்தில் வந்த காந்தி படம் மாதிரி இந்த படம் இருக்கணும்னு நினைக்கிறார். அதனால்தான் கொஞ்ச கால தாமதம் ஆகுது. அவர் எப்போ கூப்பிட்டாலும் நடிக்க தயாரா இருக்கேன். நானும் உங்களை மாதிரிதான் ரொம்ப ஆர்வமா இருக்கேன் என்றார்.
கவுண்டமணியோடு நிறைய படங்களில் காமெடி கலக்கல் செய்த சத்யராஜ், வணக்கம் தலைவாவில் விவேக்கோடு இணைந்திருக்கிறார். நிறைய காட்சிகளில் தன்னையே நக்கல் அடிக்க சொல்லி வற்புறுத்தினாராம் விவேக்கை. அப்போதான் படம் ரசிக்கும்படி இருக்கும் என்று சொல்லி சிரிக்கிறார் சத்யராஜ்.
இப்போ போட்டோயுதா புரட்சி தமிழனின் வெற்றி ரகசியம்?
-ஆர்.எஸ்.அந்தணன் |