| அர்ஜுன் சார் என் அப்பா மாதிரி...
-இசையமைப்பாளர் டி.இமான் உருக்கம்! |
| |
இப்போ எல்லா இன்ஸ்ட்ருமென்ட்டும் கீ போர்க்குள்ளே வந்தாச்சு. அதே மாதிரி ஏதாவது புது கருவிகள் அறிமுகம் ஆனா, அது உடனே நம்ப கைக்கு கிடைச்சுடுது. அதனால இசை கருவிகளை வச்சுகிட்டு வித்தை காட்டுறது எல்லோராலும் முடியும். |
அழகிய அசுரா... அழகிய அசுரா...
அத்துமீற ஆசையில்லையா...?
என்ற பாடலின் மூலம் அசுர வேகத்தை காட்டி அனைவரையும் தன் பக்கம் திரும்ப வைத்தவர் டி.இமான். 'ஏய்..கைய வச்சுகிட்டு சும்மா இருடா..' என்ற பாடல் இளசுகளை உசுப்பேற்றிய இன்னொரு பாடல். இப்படி வரிசைபடுத்துகிற மாதிரி வரிசையாக பாடல்களை கொடுத்துக் கொண்டிருக்கிற இமான், சிறந்த இசையமைப்பாளர்கள் வரிசையிலும் இருக்கிறாரா? அவருடைய இசைக்கூடத்தில் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருந்தவரை வம்படியாக இழுத்து பிடித்து பேச ஆரம்பித்தோம்.
இப்போது பேக்கேஜ்னு ஒரு சிஸ்டம் வந்திருச்சு, இசையமைப்பாளர்கள் மத்தியில். ஒரு இசையமைப்பாளரை புக் பண்ண போனீங்கன்னா இவ்வளவு சம்பளம்னு மொத்தமா சொல்லிடுவாங்க. பாடகர்கள், பாடலாசிரியர்கள் என்று அவங்களே முடிவு செஞ்சுப்பாங்க. அப்படி பண்ணுகிற இசையமைப்பாளர்கள், தரத்தையும் கொடுக்கணும். அதே நேரத்தில் செலவையும் குறைச்சு சொல்லணும் என்று எதிர்பார்க்கிறது இயற்கைதானே? எனக்கு சொந்தமாகவே மூன்று மியூசிக் தியேட்டர்கள் இருக்கு. கம்போசிங், ரெக்கார்டிங், என்று எங்கேயுமே அலைய வேண்டியதில்லை. எத்தனை மணி நேரம் வேணும்னாலும் உட்கார்ந்து வொர்க் பண்ணலாம். அப்படியிருக்கும்போது பேக்கேஜ் என்று வந்தாலும் குறைவாதான் 'கோட' பண்ணுவேன். இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுக்கறதால எனக்கும் நிறைய படங்கள் கைவசம் இருக்கு. நீங்க கேட்கிற இசையமைப்பாளர்கள் வரிசையில் நான் இருக்கேனா? இல்லையா? இப்போ சொல்லுங்க என்று கொக்கியை போடுகிறார் இமான்.
ஆணை, மதராஸின்னு வரிசையா அர்ஜுன் படங்களா பண்றீங்க போலிருக்கே? எப்படி அவரை கவர்ந்தீங்க?
அது என்னுடைய பெரிய பாக்கியம். ஒரு முறை எங்கிட்ட பேசிட்டு இருக்கும்போது உன் வயசென்ன? என்று கேட்டார் அர்ஜுன் சார். நான் என்னுடைய டேட் ஆஃப் பர்த்தை சொன்னேன். அவரு சிரிச்சிகிட்டே, "நான் அப்போது இந்த படத்திலே நடிச்சிட்டு இருந்தேன் தெரியுமா?" என்று ஒரு படத்தின் பெயரை சொன்னார். அவருடைய அனுபவத்தைவிட என் வயசு கம்மி. உண்மையில் என்னுடைய அப்பா மாதிரி இருந்து என்னை என்கரேஜ் பண்றார் அர்ஜுன் சார். நான் ரொம்ப கொடுத்து வச்சவன்.
இளையராஜா காலத்தில் ஒரு ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பா உள்ளே நுழைஞ்சாரு. அதுக்கு முன்னாடி எடுத்துகிட்டா, எம்.எஸ்.வி காலத்தில் இளையராஜா நுழைஞ்சாரு. ஒருத்தரோட இசையிலேர்ந்து முற்றிலும் வேறுபட்டு இருந்ததால்தான் அவங்களால தொடர்ந்து சாதனை போட்டோய முடிஞ்சுது. ஆனால், இப்போ எல்லா மியூசிக் டைரக்டர்களின் இசையும் ஒரே மாதிரி இருக்கே?
பின்னணி இசையை பொருத்தவரை முன்பெல்லாம் இவங்கதான் இதை பயன்படுத்த முடியும்னு இருந்திச்சு. இப்போ எல்லா இன்ஸ்ட்ருமென்ட்டும் கீ போர்க்குள்ளே வந்தாச்சு. அதே மாதிரி ஏதாவது புது கருவிகள் அறிமுகம் ஆனா, அது உடனே நம்ப கைக்கு கிடைச்சுடுது. அதனால இசை கருவிகளை வச்சுகிட்டு வித்தை காட்டுறது எல்லோராலும் முடியும். மெட்டுகள்தான் எப்போதும் புதுசா இருக்கணும். அதிலே தனித்துவம் காட்ட முடியும்ங்கறது என்னோட நம்பிக்கை.
இப்போ எல்லா இசையமைப்பாளர்களும் பழைய பாடல்களை ரீமிக்ஸ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களே?
ஒரு படத்தில் ஒரு ரீமிக்ஸ் பாடல் வந்து அது பரபரப்பா பேச ஆரம்பிச்சிட்டா, அதே மாதிரி ஒரு பாடல் போடுங்க என்று எங்களிடமும் கேட்கிறாங்க. நாங்களும் அதை செய்ய வேண்டியதாக இருக்கு. நான் கூட மதராஸி படத்திலே 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும' பாடலை ரீமிக்ஸ் பண்ணியிருக்கேன். ஆனா, அதே மெட்டில் இல்லாம பாடலை மட்டும் வைத்துக் கொண்டு மெட்டையே மாற்றியிருக்கேன்.
இசையமைப்பாளர்கள்தான் பாடல் ஆசிரியர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். ஒரு இசையமைப்பாளருக்கு ஒரு பாடலாசிரியரை பிடிக்கலைன்னா கடைசி வரைக்கும் அவரை தன் இசையில் பாடல் எழுத அனுமதிப்பதில்லை. நீங்க எப்படி?
நான் அந்த விவகாரத்துக்கே போவதில்லை. டைரக்டர் யாரை சொல்றாரோ, அவங்களைதான் யூஸ் பண்றேன். எனக்கு மீட்டர் சரியா வந்தா போதும். பாடல் சரியா இருக்கா, இல்லையான்னு டைரக்டர்தான் முடிவு செய்யணும் என்கிறார் நல்ல பிள்ளையாக!
-ஆர்.எஸ்.அந்தணன் |